
தழையத் தழைய தலைமுடி உள்ள பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தலைமுடியை பாப் செய்யும் பழக்கம் வந்து பத்தாண்டுக்கும் மேலாகி விட்டது. இன்றைய பேஷன், பிஞ்சுக்குழந்தைகளுக்கு கூட, கலரிங் போடுவது தான்.
பள்ளி, கல்லூரி மாணவிகளை கேட்கவே வேண்டாம்; கலரிங் முதல், கண்டிஷனர் வரை, சந்தையில் எதெல்லாம் புதிது புதிதாக வருகிறதோ, அவற்றை எல்லாம் வாங்கி பயன்படுத்துவது பேஷனாகி விட்டது. இதையெல்லாம் தடுக்க வேண்டிய பெற்றோர்களும், உறவினர், நண்பர்களும் கூட அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.
ஒருவரின் தலையில் சராசரியாக அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, தினமும் ஏறக்குறைய 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப் வெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு , கலரிங் செய்வது போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்.
மிதமான நீரில் தான் குளிக்க வேண்டும்; அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும். தலைமுடி என்பது, எலாஸ்டிக் தன்மையுள்ளது; மிகவும் மிருதுவானது. லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும். அதனால் வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள வேண்டும்.
விலை மலிவானது, புதிதாக வந்தது என்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில் ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய வேண்டும்.
நரை முடி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்கு நரைமுடி வளர ஆரம்பிக்கும். நரைமுடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது. எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.
தலைமுடி கருகருவென வளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரப்பி தான். மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது. அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது. நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கண்ட ஆராய்ச்சிகள் இதுவரை பலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி "கலரிங்' செய்வது தான்.
தரமான ஹேர் டை வாங்கி பயன் படுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்து விட்டனர். இதனால், பாதிப்பு தலைமுடிக்குத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். தரக்குறைவான "ஹேர் டை'யில், பாரா பெனிலின் டயாமின் என்ற (பி.பி.டி.,) ரசாயனம் உட்பட சில ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.
மருதாணி தான் ஹென்னா என்பது. மருதோன்றிச்செடி இலைகளில் உள்ள சிவப்பு சாயம் தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதை பேஸ்ட்டாக பயன்படுத்துவதும் உண்டு. முன்பெல்லாம் வீட்டிலேயே தயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பாக்கெட்டாக விற்கப்படுகிறது. பாக்கெட் ஹென்னாவில் கலப்படம் காணப்படுகிறது. இயற்கையான மருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி.,தான் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால் கையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால், பாக்கெட் ஹென்னா பயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.
அடிக்கடி தலை வாரிக்கொண்டிருக்க வேண்டாம்; அப்படி செய்தால், தலைமுடி உதிருவது அதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒரு முறை தலை வாருவது பரவாயில்லை. ஆனால், அடிக்கடி தலை வாருவது, அழுத்தம் தந்து வாருவது தலைமுடி உதிர்வதை அதிகரிக்கும். மொட்டைபோட்டால் உடனே முடி அதிகமாக வளரும் என்று பலரும் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தலையில் பரந்து வளரும் போது அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால், நுனியில் வளருவது தெரியாது. அதனால் மொட்டை போட்டால், அதிக முடி வளரும்; நரை போகும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கை.
Welcome
Blog Archive
Pages
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
Blog Archive
Mi perfil
- Thanthi
சென்னை, மார்ச்.14
தமிழக புதிய சட்டசபை & தலைமை செயலக கட்டிடம், சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்டமாககட்டப்பட்டு உள்ளது.
கோலாகல விழா
முதல்&அமைச்சர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில், சட்டமன்றம், தலைமை செயலகம் என இரு பிரிவுகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதில், சட்டமன்ற வளாகம் பசுமை கட்டிட மாக அமைக்கப்பட்டு உள்ளது.
ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலக கட்டிட வளாக திறப்பு விழா, சட்டமன்ற வளாகம் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
மன்மோகன்சிங்&சோனியா
திறப்பு விழாவையொட்டி, 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தனர்.
மாலை 5 மணிக்கு சோனியாகாந்தியும், அவரைத் தொடர்ந்து மன்மோகன்சிங்கும் புதிய சட்டசபை வளாகத்திற்கு வந்தனர். அவர்களை முதல்&அமைச்சர் கருணாநிதி வரவேற்றார். பின்னர் புதிய சட்டசபை கட்டிடத்தை பலத்த கரவொலிகளுக்கு இடையே பிரதமர் மன்மோகன் சிங் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
பேட்டரி காரில்சுற்றிப்பார்த்தனர்
அதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை முதல்&அமைச்சர் கருணாநிதி பேட்டரி காரில் அழைத்து சென்று புதிய சட்டசபை கட்டிட வளாகத்தை சுற்றிக் காண்பித்தார். கட்டிடங்களை பார்வையிட்டபின் அவர்கள் மேடைக்கு வந்ததும், மாலை 5.20 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.
சோனியா பேச்சு
பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோருக்கு முதல்&அமைச்சர் கருணாநிதி பொன்னாடை அணிவித்தார். மன்மோகன்சிங், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பொன்னாடையை பெற்றுக்கொண்டார். கருணாநிதிக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பொன்னாடை அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து முதல்&அமைச்சர் கருணாநிதி தலைமையில், சோனியா காந்தி முன்னிலையில் விழா நடைபெற்றது. தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் வரவேற்றார். முதல்&அமைச்சர் கருணாநிதி, சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விழாவில் பேசினர். சட்டசபை கட்டிடத்தின் மாதிரியை பிரதமர் மன்மோகன்சிங் திறந்துவைத்தார்
புகழாரம்
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் விழாவில் பேசும்போது, முதல்&அமைச்சர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்கள். முதல்&அமைச்சர் கருணாநிதி தலைமையில், தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று, பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டினார்.
சோனியாகாந்தி பேசும்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் Ôவலுவான தூண்Õ என்று வர்ணித்தார். மேலும் முதல்&அமைச்சர் கருணாநிதியை சுட்டிக் காட்டி, Òதி.மு.க.வின் ஆதரவு இல்லை என்றால், பாராளுமன்ற மேல்&சபையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி இருக்க முடியாதுÓ என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். சட்டசபை நினைவு மலரையும் அவர் வெளியிட்டார்.
நினைவுப்பரிசு
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு முதல்&அமைச்சர் கருணாநிதி நினைவுப் பரிசு வழங்கினார். தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி நன்றி கூறினார். மாலை 6.20 மணிக்கு விழா முடிவடைந்தது.
முன்னதாக, விழாவில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, முதல்&அமைச்சர்கள் கருணாநிதி (தமிழ்நாடு), எடியூரப்பா (கர்நாடகம்), கே.ரோசய்யா (ஆந்திரா) ஆகியோர் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மு.க.ஸ்டாலின்
துணை முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்பழகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் இக்பால்சிங், முதல்&மந்திரி வைத்திலிங்கம், மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, குலாம்நபி ஆசாத், ஜெய்பால் ரெட்டி, ஜி.கே.வாசன், மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா, காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி., சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முதல்&அமைச்சரின் மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி, முதல்&அமைச்சரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி, துணை முதல்&அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்&அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு, மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகள் கயல்விழி உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.