சென்னை, மார்ச்.14
தமிழக புதிய சட்டசபை & தலைமை செயலக கட்டிடம், சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்டமாககட்டப்பட்டு உள்ளது.
கோலாகல விழா
முதல்&அமைச்சர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில், சட்டமன்றம், தலைமை செயலகம் என இரு பிரிவுகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதில், சட்டமன்ற வளாகம் பசுமை கட்டிட மாக அமைக்கப்பட்டு உள்ளது.
ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலக கட்டிட வளாக திறப்பு விழா, சட்டமன்ற வளாகம் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
மன்மோகன்சிங்&சோனியா
திறப்பு விழாவையொட்டி, 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தனர்.
மாலை 5 மணிக்கு சோனியாகாந்தியும், அவரைத் தொடர்ந்து மன்மோகன்சிங்கும் புதிய சட்டசபை வளாகத்திற்கு வந்தனர். அவர்களை முதல்&அமைச்சர் கருணாநிதி வரவேற்றார். பின்னர் புதிய சட்டசபை கட்டிடத்தை பலத்த கரவொலிகளுக்கு இடையே பிரதமர் மன்மோகன் சிங் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
பேட்டரி காரில்சுற்றிப்பார்த்தனர்
அதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை முதல்&அமைச்சர் கருணாநிதி பேட்டரி காரில் அழைத்து சென்று புதிய சட்டசபை கட்டிட வளாகத்தை சுற்றிக் காண்பித்தார். கட்டிடங்களை பார்வையிட்டபின் அவர்கள் மேடைக்கு வந்ததும், மாலை 5.20 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.
சோனியா பேச்சு
பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோருக்கு முதல்&அமைச்சர் கருணாநிதி பொன்னாடை அணிவித்தார். மன்மோகன்சிங், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பொன்னாடையை பெற்றுக்கொண்டார். கருணாநிதிக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பொன்னாடை அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து முதல்&அமைச்சர் கருணாநிதி தலைமையில், சோனியா காந்தி முன்னிலையில் விழா நடைபெற்றது. தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் வரவேற்றார். முதல்&அமைச்சர் கருணாநிதி, சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விழாவில் பேசினர். சட்டசபை கட்டிடத்தின் மாதிரியை பிரதமர் மன்மோகன்சிங் திறந்துவைத்தார்
புகழாரம்
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் விழாவில் பேசும்போது, முதல்&அமைச்சர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்கள். முதல்&அமைச்சர் கருணாநிதி தலைமையில், தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று, பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டினார்.
சோனியாகாந்தி பேசும்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் Ôவலுவான தூண்Õ என்று வர்ணித்தார். மேலும் முதல்&அமைச்சர் கருணாநிதியை சுட்டிக் காட்டி, Òதி.மு.க.வின் ஆதரவு இல்லை என்றால், பாராளுமன்ற மேல்&சபையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி இருக்க முடியாதுÓ என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். சட்டசபை நினைவு மலரையும் அவர் வெளியிட்டார்.
நினைவுப்பரிசு
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு முதல்&அமைச்சர் கருணாநிதி நினைவுப் பரிசு வழங்கினார். தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி நன்றி கூறினார். மாலை 6.20 மணிக்கு விழா முடிவடைந்தது.
முன்னதாக, விழாவில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, முதல்&அமைச்சர்கள் கருணாநிதி (தமிழ்நாடு), எடியூரப்பா (கர்நாடகம்), கே.ரோசய்யா (ஆந்திரா) ஆகியோர் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மு.க.ஸ்டாலின்
துணை முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்பழகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் இக்பால்சிங், முதல்&மந்திரி வைத்திலிங்கம், மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, குலாம்நபி ஆசாத், ஜெய்பால் ரெட்டி, ஜி.கே.வாசன், மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா, காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி., சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முதல்&அமைச்சரின் மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி, முதல்&அமைச்சரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி, துணை முதல்&அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்&அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு, மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகள் கயல்விழி உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக